பிரச்சினையின் மூலதாரம்.
இந்தியப்பெருங் கடலின் ஒரு கணணீர் சொட்டு போல இலங்கை தேசம். அதன் உள்ளே எத்தனை தமிழர்களின் கண்ணீர் சொட்டுகள் மறைந்து கிடக்கின்றன.அது உப்புக் காற்றில் உலர்ந்து போகும் நிலை உலகு அறியாதா..?
போரிலா உலகம் தாம் அனைவரின் கனவும். நம் 'நோக்கி செல்லுதல்' அமைதியை நோக்கிதான் இருக்கும். ஆனால் ஒடுக்கப்படுதலும், உரிமை மறுக்கப்படுதலும் தலை தூக்கும்போது போராடும் குணம் உந்துவிக்கிறது. யுத்தம் ஆரம்பமாகி விடுகிறது..
இனப்போரட்டம் எங்கு ஆரம்பமாகிறது..? ஒரு இனம் மற்றொரு இனததை ஆதிக்கம் செலுத்தும்போது, மனித சுயத்தின் அடிநாதம் விழித்து கொண்டு தன்னை நிலை நாட்ட முனைகிறது.
இது ஆதிக்கத்திற்கும் , அடங்க மறுத்தலுக்குமான போர். இது ஒரு இனத்தை எதிர்த்து அல்ல. இனத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து!
அமைதியை நிலைநாட்டும் புத்த பிட்சுகளே இந்த பிரச்சனையின் மூலதாரம். இரண்டாம்தர குடிமக்களாக என்று தமிழன் ஆக்கபட்டானோ அன்றே பிரஷனை ஆரம்பமாகிவிட்டது.
இன்னும் இந்த பிரச்சனையை கூர்ந்து நோக்கினால் ஒன்று புலப்படும். இரண்டாம் உலக போருக்கு பிறகு,இங்கிலாந்தில் அட்லி தலைமையில் அமைத்த பிறகு தன் வசம் இருந்த குடியேற்ற நாடுகளுக்கு விடுதலை கொடுத்தது. ஆனால் ,இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால்-தன் கீழ் இருந்த விடுதலை பெற்ற நாடுகளில் அமைதி இருக்க கூடாது என்பதே இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் விருப்பம்.
இந்திய-பாகிஸ்தான் பிரச்சினை , இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை இவைகளுக்கு மூலப்புள்ளி வைத்ததும் இவைகளே. அதோடு சேர்த்து இலங்கையிலும் வெடிக்கு நெருப்பு வைத்துவிட்டுதான் பிரிட்டிஷ் அரசாங்கம் நகர்ந்தது.
தேயிலை தோட்டங்களில் : (---தொடர்வேன்)
Sunday, January 7, 2007
Subscribe to:
Posts (Atom)